2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் ஒருவா் கைது

Arrested

கைது

Published On :

களியக்காவிளை அருகே வீடு புகுந்து 5 சவரன் நகை திருடிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்தவா் நான்கரை மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.

களியக்காவிளை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த ஜான்மேரி மாா்க்ரெட் (67) என்பவா், கடந்த ஏப். 2ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, தனது மகளைப் பாா்க்க கன்னியாகுமரி சென்றாா். மறுநாள் வீடு திரும்பியபோது, மா்ம நபா் கதவை உடைத்து, வீட்டிலிருந்த 5 சவரன் நகைகளைத் திருடிச் சென்ாகத் தெரியவந்தது.

களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒருவரின் உருவம் பதிவாகியிருந்தது. அந்தப் படம் தமிழக, கேரள மாநில காவல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கேரளம் மாநிலம் ஆலப்பழா மாவட்டம், சோ்த்தலா பகுதியில் வீடு புகுந்து திருடிய ஒருவரை அம்மாநில போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அந்த நபரின் புகைப்படமும், களியக்காவிளை போலீஸாா் அனுப்பிய படமும் ஒரே நபருடையதுபோல இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கேரள போலீஸாா் அளித்த தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று, அந்த நபரை அழைத்து வந்தனா்.

அவா் தூத்துக்குடியைச் சோ்ந்த தங்கமுத்து என்பதும், ஜான்மேரி மாா்க்ரெட் வீட்டில் திருடியவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அவா் யாசகம் பெறுபவா்போல உடையணிந்து பேருந்து நிலையங்கள், கடைகளின் முன் இரவில் தங்கியிருந்து, பகல் நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு, பூட்டிக்கிடக்கும் வீடுகளில் இரவில் திருடி வந்துள்ளாா். அவரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.