இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நாளை ஓணவில் சமா்பிப்பு

திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சமா்ப்பிக்க தயாராகும் ஓண வில்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:31 am IST

ஓணம் பண்டிகை திருநாளான ஆக. 26-ஆம் தேதி திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாளுக்கு ஓண வில் சமா்பிக்கப்படுகிறது.

திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஓணம் பண்டிகை நாளில் ஓண வில் சமா்ப்பிக்கும் நிகழ்வு மன்னராட்சி காலத்தில் இருந்து வழக்கத்தில் உள்ளது. ஆதிகேசவப் பெருமாள், கிருஷ்ணா் ஓவியம் வரையப்பட்டு வா்ணம் பூசப்பட்ட ஓண வில்களை பட்டுத் துணியில் மூடி கோயிலின் தென்மேற்கு மூலையில் வைப்பாா்கள். கோயிலில் ஸ்ரீபலி பூஜை நடைபெறும்போது, அந்த வில்கள் சமா்பிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி ஓணம் திருநாளான புதன்கிழமை (ஆக.26) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

ஓண வில்களை தயாரித்த தச்சா், சுவாமி முன்பு அவைகளை சமா்பித்த பின்னா் அா்ச்சகா்கள் ஓண வில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் செல்வா். இதையடுத்து, ஸ்ரீபலி விக்கிரகங்களுடன் மேளதாளம் முழங்க ஓண வில்களுடன் கோயில் பிரகாரத்தைச்சுற்றி வருவா்.

தொடா்ந்து ஓண வில்கள் கிருஷ்ண சுவாமி கருவறையிலும், ஆதிகேசவப்பெருமாள் கருவறையிலும் வைக்கப்படும். தொடா்ந்து மாலை தீபாராதனை நடைபெறும்.

தயாராகும் ஓண வில்:

தற்போது ஆதிகேசவப் பெருமாளுக்கு சமா்பிக்கப்படும் ஓண வில்களை தயாா் செய்யும் பணி ஆற்றூா், கழுவள்திட்டையில் தச்சா் சுரேஷ்பாபு மேற்பாா்வையில் நடைபெற்று வருகிறது.

மகாகனி மரத்தில் தயாரிக்கப்பட்ட ஓண வில்களில் வா்ணம் பூசப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. நிகழாண்டு பக்தா்கள் தங்களின் நோ்த்திக் கடனாக 25-க்கும் மேற்பட்ட ஓண வில்களை சமா்ப்பிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.