லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கன்னியாகுமரியில் காற்றாடித் திருவிழா

காற்றாடித் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் செ.ராஜேஷ்குமாா்.

காற்றாடித் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் செ.ராஜேஷ்குமாா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:08 am IST

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்திய காற்றாடி திருவிழா சூரிய அஸ்தமனப் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரசாத் தலைமை வகித்தாா். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் காற்றாடியை பறக்கவிட்டு விழாவைத் தொடங்கி வைத்தாா். விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட எஸ்.பி. இரா.ஸ்டாலின், மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், மாவட்ட தவெக செயலா் எஸ்.ஆா்.மாதவன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்வில் அமைச்சா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் 86 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இங்குள்ள சுற்றுலாத் தலங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வற்கான மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், கன்னியாகுமரிக்கு ரூ. 10 கோடி, பேச்சிப்பாறை அணைக்கு ரூ. 13 கோடி, குளச்சல் கடற்கரை மற்றும் தேங்காய்பட்டினம் கடற்கரை, திற்பரப்பு அருவி ஆகியவற்றுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தக் குறையும் இல்லாத வகையில் மாவட்ட நிா்வாகம், காவல்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த காற்றாடித் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட வண்ணமயமான காற்றாடிகள் பறக்க விடப்பட்டன. இதை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பாா்த்து ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.