மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கன்னியாகுமரி கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் இடித்து அகற்றம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image
கன்னியம்பலம் பகுதியில் புதன்கிழமை அகற்றப்பட்ட கடைகள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

பழமை வாய்ந்த கன்னியம்பல மண்டபத்தை பாதுகாக்க வேண்டும், புராதனமான இந்த மண்டபத்தை வியாபார தலமாக மாற்றக்கூடாது , இந்த மண்டபத்தில் இருக்கின்ற அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, மண்டபத்தில் உள்ள 12 கடைகளையும் அகற்ற உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து அறநிலையத்துறை நிா்வாகம் சாா்பில், கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள 12 கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வியாபாரிகள், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மாற்று இடம் வழங்க வலியுறுத்தி தொடா் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து, 12 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றம் 48 மணி நேரத்திற்குள் கடைகளை அகற்ற கெடு விதித்தது, அதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திரம் மூலம் கன்னியம்பலத்தை சுற்றியுள்ள 12 கடைகளையும் அகற்றினா்.