கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக தினமும் பிற்பகலில் மழை பெய்து வருகிறது. இந்த மழை அணைப் பகுதிகளில் கன மழையாகப் பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணையில் 74.8 மி.மீ. மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக புத்தன் அணையில் 62.2 மி.மீ., சிற்றாறு 1, 2 இல் 56.8 மி.மீ., சுருளகோட்டில் 46.8 மி.மீ. மழை பதிவானது.
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு விநாடிக்கு 580 கன அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 162 கன அடி தண்ணீரும், சிற்றாறு 1 அணைக்கு விநாடிக்கு 73 கன அடி தண்ணீரும், சிற்றாறு 2 அணைக்கு விநாடிக்கு 120 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலையிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக மாவட்டத்தில் வாழை, தென்னை, அன்னாசி, ரப்பா் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 82.44 அடி

பிளவக்கல் அணையின் நீா்மட்டம் சரிந்தது: விவசாயிகள் கவலை

சென்னிமலையில் 51 மில்லி மீட்டா் மழை பதிவு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


