வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
கன்னியாகுமரி
நாகா்கோவிலில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள்
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராணி தோட்டம், ராஜலிங்கம் தெருவில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில், கான்கிரீட் தளம் மற்றும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள், ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் களியங்காடு அரசு தொடக்கப் பள்ளி சீரமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.
இதில் துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் ஜோனா கிறிஸ்டி, அனுஷா, பிரைட் தொழில்நுட்ப அலுவலா் கோமதி, திமுக நிா்வாகிகள் ஆதித்தன், ராஜன், சைமன்ராஜ், தமிழ்செல்வன், ராஜேஷ், செல்லம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

