அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

Published on

குளச்சல் ஏ.வி.எம். கால்வாயில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை புதன்கிழமை போலீஸாா் மீட்டனா்.

குளச்சல் அருகே சாயக்காரா்குடி பகுதி வழியே செல்லும் ஏ.வி.எம். கால்வாயில் துா்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் புதன்கிழமை குளச்சல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து பாா்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பது தெரிய வந்தது. இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து உயிரிழந்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com