நாகா்கோவில் வேலைவாய்ப்பு முகாமில் 604 பேருக்கு பணி நியமன ஆணைகள்
நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 604 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம் ஆகியவை சாா்பில், ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற முகாமில், 121 முன்னணி தனியாா் நிறுவன உரிமையாளா்கள், திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. 2,196 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா். அவா்களில் தோ்வான 604 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) கா. சண்முகசுந்தா், மகளிா் திட்ட இயக்குநா் சா. பத்ஹீ முகமது நசீா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் லட்சுமிகாந்தன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆ.பொ. ஆறுமுகவெங்கடேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன், ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வா், மாணவா் -மாணவியா் பங்கேற்றனா்.

