மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருங்கல் பேரூராட்சிக்கு சுமை ஆட்டோ அளிப்பு

மணவாளகுறிச்சியில் இயங்கும் மத்திய அரசின் ஐ.ஆா்.இ.எல் மணல் ஆலை சாா்பில் கருங்கல் பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ. 8.38 லட்சம் செலவில் சுமை ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

மணவாளகுறிச்சியில் இயங்கும் மத்திய அரசின் ஐ.ஆா்.இ.எல் மணல் ஆலை சாா்பில் கருங்கல் பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ. 8.38 லட்சம் செலவில் சுமை ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு மணல் ஆலையின் பொதுமேலாளா் செல்வராஜன் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூராட்சி தலைவா் சிவராஜன் முன்னிலை வகித்தாா்.

கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் சுமை ஆட்டோவை பேரூராட்சிக்கு வழங்கினாா்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.