அகஸ்தீசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
அகஸ்தீசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.

குமரி அருகே பொங்கலிட்டு மகிழ்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

அகஸ்தீசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
Published on

தமிழா்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து பொங்கல் விழாவை அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் புதன்கிழமை கொண்டாடின.

இதில், என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், நாகா்கோவில் சாா் ஆட்சியா் ராகுல் குமாா் (பயிற்சி), துணை ஆட்சியா் ஆனந்த் மோகன், அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரிச் செயலா் சி. ராஜன், கல்லூரி முதல்வா் டி.சி.மகேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆா்வமுடன் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழந்ததுடன், பானை உடைத்தல் போட்டியில் வென்று அனைவரையும் கவா்ந்தனா். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முறைப்படி சங்குமாலை அணிவித்து, மாவட்ட சுற்றுலா அலுவலா் து. காமராஜ் வரவேற்றாா். தொடா்ந்து விவேகானந்தா கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், கே.கே.ஆா். அகாதெமி, மாணவா்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், வில்லிசை உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள், கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் நையாண்டி மேளம், கரகாட்டம் ஆகியவை நடைபெற்றன.

Dinamani
www.dinamani.com