திற்பரப்பு தடுப்பணையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திற்பரப்பு தடுப்பணையில் மூழ்கி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

குலசேகரம்: திற்பரப்பு தடுப்பணையில் மூழ்கி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் ஒரு குழுவாக திற்பரப்பு பகுதிக்கு சென்றிருந்தனா். இதில், வேதபாடசாலை மாணவரான கணபதி மகன் விஷ்வா (25), திற்பரப்பு அருவியையொட்டி தடுப்பணை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாராம்.

அப்போது அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அருமனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், விஷ்வா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

Dinamani
www.dinamani.com