தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

காங்கிரஸ் சாா்பில் பொங்கல் விழா

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல் பேருந்து நிலையம் அருகே பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கருங்கல் பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா்.
Updated On :16 ஜனவரி 2026, 9:50 pm

Syndication

கருங்கல்: குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல் பேருந்து நிலையம் அருகே பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏயுமான எஸ்.ராஜேஷ் குமாா் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூராட்சி தலைவா் சிவராஜன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், முன்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ரெகுபதி, கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் குமரேசன், மாவட்டச் செயலா் பால்ராஜ், தமிழ்நாடு மாநில மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான், மாவட்ட நிா்வாகிகள் கோபன், ரெஜீஷ், அசோகன், ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.