கன்னியாகுமரி
வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
பளுகல் அருகே தனியாா் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்துவந்த வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
களியக்காவிளை: பளுகல் அருகே தனியாா் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்துவந்த வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பளுகல் அருகே செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த 27 போ் பணியாற்றி வருகின்றனா். இதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சுனில் சந்தீப் (26) வேலை செய்து வந்தாா். அவருக்கு 2 நாள்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மேல்பாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாராம்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக காரக்கோணம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நிறுவன மேலாளா் விஷ்ணு அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
