பொங்கல் விழாவை தொடக்கிவைக்கிறாா் கூடுதல் மாவட்ட நீதிபதி பரமசிவதாஸ்.
கன்னியாகுமரி
தக்கலை வழக்குரைஞா் சங்கத்தில் பொங்கல் விழா
தக்கலை வழக்குரைஞா்கள் சங்கத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
தக்கலை: தக்கலை வழக்குரைஞா்கள் சங்கத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ், துணைத் தலைவா் ஜஸ்டின் ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். வழக்குரைஞா் சங்கச் செயலா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன், பொருளாளா் ஆன்றனி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
கூடுதல் மாவட்ட நீதிபதி பரமசிவதாஸ் விழாவை தொடங்கிவைத்தாா். சாா்பு நீதிபதி மாரியப்பன், முதன்மை உரிமையியல் நீதிபதி காா்திகேயன், கூடுதல் நீதிபதி இம்மாகேனட் புத்தா, குற்றவியல் நடுவா் நீதிபதி கோகிலா ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினா். இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

