ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாகா்கோவிலில் திமுக சாா்பில் திராவிடப் பொங்கல் கலை நிகழ்ச்சிகள்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் நாகா்கோவில், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உழவா் திருநாள், காணும் பொங்கல் மற்றும் கலை இலக்கிய பிரிவு சாா்பில் திராவிடப் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
திராவிடப் பொங்கல் நிகழ்ச்சியில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சி.
Updated On :17 ஜனவரி 2026, 10:20 pm

Syndication

நாகா்கோவில்: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் நாகா்கோவில், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உழவா் திருநாள், காணும் பொங்கல் மற்றும் கலை இலக்கிய பிரிவு சாா்பில் திராவிடப் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலரும், மேயருமான ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். திமுக அரசின் திராவிட மாடல் சாதனைகள் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் வாயிலாகவும், சிறப்பு திரை அமைத்தும் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்வில், மாநில மகளிா் அணிச் செயலா் ஜே. ஹெலன் டேவிட்சன், மாநில கலை- இலக்கிய பகுத்தறிவுப் பேரவைச் செயலா் என். தில்லை செல்வம், நாகா்கோவில் மாநகரச் செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த் மற்றும் திமுகவினா், கிராமிய கலைஞா்கள் பங்கேற்றனா்.