புகையிலை பொருள்கள் விற்ற முதியவா் கைது

பளுகல் அருகே பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பளுகல் அருகே பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் அருகே சூரன்குழி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இக்கடையில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பளுகல் போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, விற்பனைக்காக அங்கு மறைத்து வைத்திருந்த, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com