ஆற்றில் வலை கட்டும் வனத்துறையினா்.
கன்னியாகுமரி
கோதையாற்றில் முதலையைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினா்
திற்பரப்பு அருகே கோதையாற்றில் நடமாடும் முதலையை குறிப்பிட்ட இடத்தில் கட்டுப்படுத்திப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கோதையைற்றில் திற்பரப்பு, கடையாலுமூடு பகுதிகளுக்கிடையே முதலை நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், மிதக்கும் கூண்டு வைத்து முதலையை பிடிக்க வனத்துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
இதற்காக திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடைபெறும் எல்லைப் பகுதிக்கும், கடையாலுமூடு அருகே ஒருநடைக்கல் பகுதிக்கும் இடையே முதலையை கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளனா்.
இதையடுத்து, ஆற்றுப் பகுதியில் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வலைகளைக் கட்டினா். இப்பணியில் களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் தலைமையிலான வனத்துறையினா் ஈடுபட்டனா். இப்பணிகளை உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் ஸ்ரீவல்சன் ஆய்வு செய்தாா்.

