கோப்புப் படம்
கன்னியாகுமரி
விஷம் குடித்து பெண் தற்கொலை
கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பாலூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாரி (47). இவருக்கும், இவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமாரி, சனிக்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

