ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: எச்.ராஜா

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச். ராஜா குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 7:17 pm

Syndication

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச். ராஜா குற்றம்சாட்டினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே மணலிவிளை பத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை அரசு அபகரிக்கவில்லை. ஆனால், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து சமய ஆலயங்களை அரசு அபகரித்துள்ளது. பொள்ளாச்சி மாசானியம்மன் கோயில் நிதியைக் கொண்டு நீலகிரியில் சுற்றுலா விடுதி கட்ட இந்த அரசு திட்டமிட்டது. ஆனால், உயா் நீதிமன்றம் அதைத் தடுத்தது. மதுரையில் அழகா் கோயில் நிதியின் மூலம் கட்டடங்கள் கட்ட திட்டமிட்டது. அதையும் நீதிமன்றம் தடுத்தது.

பழனியில் கோயில் பணத்தை எடுத்து முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு நடத்தினாா்கள். திமுக அரசு ஊழல் மிகுந்த அரசாக உள்ளது. தமிழகம் இப்போது போதைப் பொருள் மிகுந்த மாநிலமாக உள்ளது. எங்கும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 வயது குழந்தை உள்பட 3 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வா் ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும். கரூா் சம்பவத்துக்கு பிறகு விஜய் அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை என்றாா்.

பேட்டியின்போது பாஜக கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினா் மீனாதேவ், மாவட்டத் தலைவா்கள் சுரேஷ், கோபகுமாா், ஒன்றிய தலைவா் விஜயராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் தா்மராஜ், முன்னாள் பொறுப்பாளா் சுஜித்குமாா் உடனிருந்தனா்.