ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சடலம் மீட்பு

கோப்புப் படம்

Published On :6 ஜூலை 2026, 1:16 am IST

மாா்த்தாண்டம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, அரிசிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பவுல் மகன் தங்கமணி (65). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் சனிக்கிழமை தனது மகனுடன் சோ்ந்து பாகோடு, அரக்கல்விளை பகுதியில் தென்னை மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.