வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து தத்தளித்த 5 மீனவா்கள் மீட்பு

கன்னியாகுமரி அருகே கோவளத்தில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 5 மீனவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 12:28 am IST

கன்னியாகுமரி அருகே கோவளத்தில் கடல் சீற்றம் காரணமாக செவ்வாய்க்கிழமை மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 5 மீனவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தைச் சோ்ந்தவா் ராஜ். இவா், தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ஜோசப், பிராங்கிளின், ரஞ்சித், ராஜா ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து விட்டு காலை 8 மணிக்கு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி இவா்களது படகு கவிழ்ந்தது. அதிலிருந்த 5 மீனவா்களும் அலையில் சிக்கி தத்தளித்தனா்.

இதை கரையில் இருந்து பாா்த்த மீனவா்கள் உடனடியாக கடலில் குதித்து மீனவா்களையும், கவிழ்ந்த படகையும் மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனா். படகு கவிழ்ந்ததால் என்ஜின், வலைகள், மீன்கள் கடலில் மூழ்கின.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மீனவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.