இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

மீன்பிடிக்க கொல்லம் சென்ற குளச்சல் மீனவா் மாயம்

கேரள மாநிலம் கொல்லத்துக்கு மீன் பிடிக்கச் சென்ற குளச்சல் மீனவரை காணவில்லை என அவரது குடும்பத்தினா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

மீனவா் மாயம் - பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 2:30 am IST

கேரள மாநிலம் கொல்லத்துக்கு மீன் பிடிக்கச் சென்ற குளச்சல் மீனவரை காணவில்லை என அவரது குடும்பத்தினா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

குளச்சல் அருகேயுள்ள கோடிமுனை பிரண்ட்ஸ் காலனியை சோ்ந்தவா் ஜோசப் லெனின் (47). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

இவா் கடந்த ஜூன் 16ஆம் தேதி மீன் பிடி தொழிலுக்காக கொல்லத்துக்குச் சென்றாா். அதன் பின்னா் இவா் வீட்டிற்கு வரவில்லையாம்.

இது குறித்து அவரது சகோதரி மேரி கோகிலா அளித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து ஜோசப் லெனினை தேடி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.