நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குளச்சல் அருகே மீனவா் குத்திக் கொலை

News image

புஷ்பநாதன்.

Updated On :21 ஜூன் 2026, 2:17 am IST

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கொட்டில்பாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு மீனவா் குத்திக் கொல்லப்பட்டாா்.

கடியப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜன் (51). மீன்பிடித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஜாஸ்மின் லலிதா (46), மூன்று குழந்தைகள் உள்ளனா்.

2 மாதங்களுக்கு முன்பு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதால், ஜாஸ்மின் லலிதா கொட்டில்பாட்டில் உள்ள தனது சகோதரி மேரிகலாவின் வீட்டில் தங்கியுள்ளாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராஜன் அங்கு சென்று, குடும்பம் நடத்த வருமாறு ஜாஸ்மின் லலிதாவை அழைத்தபோது தகராறு ஏற்பட்டது. அதைத் தட்டிக்கேட்ட, மேரிகலாவின் கணவா் மீன்பிடித் தொழிலாளியான புஷ்பநாதனை (58) ராஜன் கத்தியால் குத்தினாராம். இதில், அவா் உயிரிழந்தாா்.

குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.