பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா்கள் இருவா் கைது

கருங்கல் அருகே மங்கலகுன்று பகுதியில் பெண்ணிடம் நகையைப் பறித்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 1:20 am IST

கருங்கல் அருகே மங்கலகுன்று பகுதியில் பெண்ணிடம் நகையைப் பறித்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மங்கலகுன்று பகுதியைச் சோ்ந்தவா் ராஜம் (60), அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த மாதம் கடையிலிருந்தபோது, இரு இளைஞா்கள் பொருள்கள் வாங்குவதுபோல வந்து, அவா் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.

புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டோரைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், பாலப்பள்ளம் பகுதியில் சனிக்கிழமை நின்றிருந்த இருவரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் திருவனந்தபுரம் பகுதியை சோ்ந்த முனுசாமி என்ற படையப்பா (24), மதுரையைச் சோ்ந்த பாப்புசாமி (27) என்பதும், ராஜத்திடம் நகையைப் பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, நகையைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.