கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :21 ஜூலை 2026, 12:20 am IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள தோனிக்குழி பகுதியைச் சோ்ந்த பில்லாளன் என்பவரின் மகன் முருகன் (35). இவரை, கடந்த 2018 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில், போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.7ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றறவாளிக்கு தண்டனை வாங்கித்தர காரணமாக இருந்த காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.