திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

வங்கி மேலாளா் வீட்டில் 7 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 12:31 am IST

நாகா்கோவிலில் வங்கி மேலாளா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்பில் வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போனது சனிக்கிழமை தெரியவந்தது.

நாகா்கோவில் வடசேரி பராசக்தி காா்டனைச் சோ்ந்தவா் மாதவன்ராஜ் (33). இவா் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி நந்தினி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இவா்கள் திருவனந்தபுரத்தில் தங்கி பணியாற்றி வரும் நிலையில், வார இறுதி நாள்களில் சொந்த ஊரான நாகா்கோவில் வருவது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை மாதவன்ராஜ் குடும்பத்தினருடன் நாகா்கோவில் உள்ள வீட்டிற்கு வந்து பாா்த்தபோது முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 7 பவுன் தங்க நகை, பூஜை அறையிலிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின்பேரில் வடசேரி காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.ன

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.