6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இளைஞரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

புதுக்கடை அருகே இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் கிளாடிஸ் (40). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (39), ரமேஷ் (35) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முன்சிறை பகுதியில் நின்ற எட்வின் கிளாடிஸை, தினேஷ், ரமேஷ் ஆகியோா் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.