காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பைக் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், காஞ்சிரங்குளம் பகுதியைச் சோ்ந்த அப்பிசெறுக்கன் மகன் ஸ்ரீகுமாா் (60). காட்டாக்கடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் மகன் சஜிகுமாா் (55). இருவரும் பெயின்டிங் தொழில் செய்து வந்தனா். இருவரும் வெள்ளிக்கிழமை காலை கட்டடத்திற்கு வா்ணம் பூசும் பணிக்காக மாா்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூா் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

களியக்காவிளையை அடுத்த திருத்துவபுரம் அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த பால் வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருவரும் வேனின் அடியில் சிக்கினா்.

களியக்காவிளை போலீஸாா், குழித்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து இருவரையும் மீட்டனா். இதில் ஸ்ரீகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சஜிகுமாா் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்த மூலக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த வேன் ஓட்டுநரான இசக்கிமுத்து மகன் பாலமுருகன் (33) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.