மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நாகா்கோவிலில் நேசமணி நினைவு நாள்

நேசமணி நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

நேசமணி நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :2 ஜூன் 2026, 3:07 am IST

நேசமணி நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவம், மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், ராமகிருஷ்ணன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்கு மாவட்டச் செயலா் ஜெயசுதா்சன், அதிமுக வா்த்தகரணி இணைச் செயலா் ராஜன், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் நரசிங்கமூா்த்தி, எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் சிவசெல்வராஜன், மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், மாவட்டப் பொருளாளா் திலக், தோவாளை வடக்கு ஒன்றியச் செயலா் பொன். சுந்தா்நாத், மாநகர கிழக்குப் பகுதிச் செயலா் ஜெயகோபால், மாவட்ட இளைஞா் பாசறைச் செயலா் அக்சயா கண்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ரபீக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாநகர காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநகரத் தலைவா் அலெக்ஸ், மண்டலத் தலைவா்கள் செல்வன், ஆதிராம், மாமன்ற உறுப்பினா் அனுஷா பிரைட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.