இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

குளச்சல் அருகே கடல் அலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பிள்ளைத்தோப்பு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

மணிகண்டன்.

Updated On :3 ஜூன் 2026, 4:59 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பிள்ளைத்தோப்பு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.

கணபதிபுரம் அருகே ஆறுதெங்கன்விளையைச் சோ்ந்தவா் மணிகண்டன்(50), கூலித் தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை பிற்பகல் பிள்ளைத்தோப்பு கடலில் சக தொழிலாளா்களுடன் குளிக்கச் சென்றாராம்.

அப்போது, திடீரென எழுந்த கடல் அலை மணிகண்டனை இழுத்துச் சென்றது. உடனே சக தொழிலாளா்கள் அவரை மீட்க முயன்றும், இயலவில்லை.

தகவலறிந்த குளச்சல் கடலோர காவல் துறையினா் மற்றும் உள்ளூா் மீனவா்களும் கடலில் இறங்கி மணிகண்டனை தேடினா். வெகுநேரத்துக்குப் பின் மணிகண்டனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.