/
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை நடைபெற்றது.
சாா் ஆட்சியா் (பொ) புஷ்பா தேவி தலைமை வகித்து, விளவங்கோடு, இடைக்கோடு, அருமனை குறுவட்டத்திற்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
விளவங்கோடு வட்டாட்சியா் வயோலா பாய், வட்ட வழங்கல் அலுவலா் அனிதா குமாரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கண்ணன், சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வினைதீா்த்தான், மண்டல துணை வட்டாட்சியா் விஜய லதா, மேத்யூ ஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.









