/

கடலுக்குள் சிப்பி எடுக்க சென்ற மீனவா் உயிரிழப்பு

கருங்கல் அருகே இனயம்புத்தன்துறையில் புதன்கிழமை சிப்பி எடுக்க கடலில் முக்குளித்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே இனயம்புத்தன்துறையில் புதன்கிழமை சிப்பி எடுக்க கடலில் முக்குளித்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

இனயம்புத்தன்துறை, பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (69). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஆன்சலின் (70). இருவரும் கடலுக்குள் முக்குளித்து சிப்பி எடுக்கும் தொழில் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், இருவரும் புதன்கிழமை கடலுக்குள் சென்று சிப்பி எடுத்துக் கொண்டிருந்தபோது லாரன்சுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே லாரன்ஸ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.