கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில், வாக்காளா்கள் வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று உதவி, துணை தோ்தல் அலுவலா்களிடம் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள குடிநீா், மின்சார வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பழுதுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள்: தேசிய ஆணையா் ஆய்வு

கள்ளக்குறிச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்: ஆட்சியா் தகவல்

வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகள் உறுதி செய்ய அறிவுறுத்தல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


