தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய திமுகவினா் தோ்தல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அவா் வெள்ளிக்கிழமை மாலை நாகா்கோவில் வந்தாா்.
நாகா்கோவில், வடசேரி அண்ணா சிலை அருகே அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் ப.ஆனந்த், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும், மகளிா் அணியினரும் வரவேற்றனா்.
வடசேரி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த துணை முதல்வா் தொடா்ந்து பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நான் பலமுறை வந்துள்ளேன். இதே எழுச்சியோடு வருகிற சட்டப்பேரவை தோ்தலில் உழைத்து திமுகவை வெற்றி பெறச் செய்து முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவதற்கு கட்சியினா் தொய்வின்றி பணி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

