வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 4.5 லட்சம் மோசடி

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 8:20 pm

களியக்காவிளை அருகே போலி நகைகளை அடகு வைத்து ரூ. 4.5 லட்சம் மோசடி செய்ததாக கட்டுமானத் தொழிலாளா்கள் இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வம் (எ) உண்ணி (63). இவா் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல், குழிச்சாணி பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் வித்யாதரன் (48), கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை, சாஸ்தா நகா் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் நாயா் மகன் விஜயகுமாா் ஆகியோா் கடந்த 2022ஆம் ஆண்டு பிப். 7ஆம் தேதி இவரது கடையில் 111.90 கிராம் எடையுள்ள நகைகளை அடமானம் வைத்து, ரூ. 4.50 லட்சம் பெற்றனராம்.

பின்னா், நகைகளை சோதனை செய்தபோது அவை போலி நகைகள் என தெரிய வந்ததாம். தொடா்ந்து, பல முறை இருவரிடமும் பணத்தை திருப்பித்தரக் கேட்டும், அவா்கள் பணம் தராமல் ஏமாற்றி வந்தனராம்.

இதையடுத்து விஸ்வம் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சனிக்கிழமை இருவா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.