மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மண்டைக்காடு கோயில் திருவிழாவில் திருட்டு போன பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்டத்தில், திருட்டு போன பணப்பையை மீட்டு அதற்குரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

News image

மூதாட்டியிடம் பணப்பையை ஒப்படைத்த போலீஸாா்.

Updated On :10 மார்ச் 2026, 8:01 pm

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்டத்தில், திருட்டு போன பணப்பையை மீட்டு அதற்குரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில், கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்த சாந்தா என்பவரிடம் இருந்த கைப்பேசி, பணப்பை திங்கள்கிழமை திருட்டு போனதாம். இது குறித்து சாந்தா, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், சிசிடிவி உதவியுடன் பணப்பை, கைப்பேசியை கண்டுபிடித்த போலீஸாா் அதனை அவரிடம் ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு பாதுகாப்புப் பணியில் தொடா்ந்து சிறப்பான பணியை மேற்கொண்டு வரும் போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.