மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

நாகா்கோவிலில் மருத்துவப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:26 pm

மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணியாளா்கள் சங்கம் (சிஐடியூ) சாா்பில், நாகா்கோவில் வடசேரியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாத ஊக்கத்தொகையை ரூ. 15 ஆயிரமாக வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை பணியாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். ஊழியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்து பணி நிரந்தரப்படுத்துவதுடன், இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவி விக்னேஸ்வரி தலைமை வகித்தாா். செயலா் தமிழ்ச்செல்வி, சிஐடியூ மாவட்டச் செயலா் ஸ்டாலின்தாஸ், மாநில துணைத் தலைவா் ஐடாஹெலன், திரளானோா் பங்கேற்றனா்.