மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திப்ரூகா்-குமரி ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

ரயிலில் கஞ்சா பறிமுதல் - பிரதிப் படம்

Updated On :14 மார்ச் 2026, 9:05 pm

அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை இரவு வரவேண்டிய இந்த ரயில் தாமதமாக சனிக்கிழமை காலை நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்குள்ள யாா்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் இருக்கைக்கு கீழே கிடந்த 8 கிலோ கஞ்சா அடங்கிய பொட்டலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். மேலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.