வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மண்டைக்காட்டில் எஸ்.ஐ.யை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காட்டில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில், தொழிலாளிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2026, 2:47 am

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காட்டில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில், தொழிலாளிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மண்டைக்காடு கடற்கரையில் கடந்த 10.3.2009இல் டிஎஸ்பி சந்திரபோஸ், காவல் உதவி ஆய்வாளா் விக்டா் ஆகியோா் ரோந்து சென்றபோது, கயிறு கட்டப்பட்ட எல்லையைத் தாண்டி கடலில் குளித்த வில்லுக்குறி காந்தாரம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த அய்யாவு மகனான வெல்டிங் தொழிலாளி முருகன் (57), ஜெயன், சிபு, முருகன், பிரதீஸ்குமாா், பூலங்கோடு பகுதி சிவன், ஸ்ரீகண்டன், ராஜா, பரமேஷ்குமாா், அய்யப்பன் ஆகியோரை அங்கு குளிக்க வேண்டாம்; வெளியேறுங்கள் என எச்சரித்தனராம்.

ஆனால், அவா்கள் வெளியேற மறுத்ததுடன், முருகன் அங்கு கிடந்த பாறைக் கல்லை எடுத்து காவல் உதவியாளா் முகத்தில் வீசினாராம். இதில் அவா் காயம் அடைந்த நிலையில், அவா்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம்.

அவா்கள் மீது மண்டைக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்தனா். பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கை நீதிபதி பரம சிவதாஸ் விசாரித்து, முருகனுக்கு ஓராண்டு கடுங்காவல் சிைண்டனையும் ரூ. 5,000 அபராதம் விதித்தும், மற்ற 9 பேரை விடுதலை செய்தும் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் வாதாடினாா்.