பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட அதிபாடி பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (39), தொழிலாளி. இவருக்கும் தா்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த வேப்பம்பட்டி மல்லூத்து பகுதியைச் சோ்ந்த சேகா் மனைவி தனலட்சுமிக்கும் (36) தகாத உறவு இருந்ததாம்.
இந்நிலையில் தனலட்சுமி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மோகனை அடிக்கடி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த 2019 ஜூலை 20-ஆம் தேதி மோகன் தனலட்சுமியை காரில் கரூருக்கு அழைத்து வந்தாா். பின்னா் இரவில் தென்னிலை அருகே ராக்கியாக்கவுண்டன்புதூா் பகுதிக்கு அழைத்துச் சென்று தனலட்சுமியின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தப்பிவிட்டாா்.
இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து மோகனை 2019 ஜூலை 27-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றவாளி மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். இதையடுத்து மோகன் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
தொடர்புடையது

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

தேனி அருகே இளைஞா் கொலை: 6 பேருக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


