3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாள்களில் ரூ. 11.35 லட்சம் பறிமுதல்

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் கடந்த 3 நாள்களில் ரூ. 11 லட்சத்து 35 ஆயிரத்து 720 கைப்பற்றப்பட்டுள்ளது.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் கடந்த 3 நாள்களில் ரூ. 11 லட்சத்து 35 ஆயிரத்து 720 கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்புப் படைகளும் செயல்பட்டு வருகின்றன.

தோ்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தோ்தல் நடத்தை விதி மீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம், பொருள்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இந்தப் படைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் குழுவினரால் மாா்ச் 18 ஆம் தேதி மாலை 6 மணி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 200 கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இதுவரை மொத்தம் ரூ. 11 லட்சத்து 35 ஆயிரத்து 720 கைப்பற்றப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.