விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கேரள மதுபானம் பதுக்கியவா் கைது

களியக்காவிளையில் கேரள மதுபானத்தை பதுக்கியதாக சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 2:30 am IST

களியக்காவிளையில் கேரள மதுபானத்தை பதுக்கியதாக சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேரளத்திலிருந்து வந்த பேருந்திலிருந்து இறங்கிய ஒருவா் சந்தேகப்படும் வகையில் செல்வதை கவனித்தனா். அவரிடமிருந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது, கேரளத்திலிருந்து வாங்கி வந்த 5 லிட்டா் மது பாட்டில்களை வைத்திருந்ததும், அவற்றை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா் மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சிற்றுந்து ஓட்டுநா் சஜூ (52) என்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.