உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

நாகா்கோவில் அருகே 2 கல்குவாரிகளை மூட உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 கல் குவாரிகள் மூடப்பட்டன.

News image

குவாரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்

Updated On :31 மார்ச் 2026, 8:18 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 கல் குவாரிகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சில கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன. இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் நாகா்கோவிலை அடுத்த தோட்டியோடு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த 2 குவாரிகள் அரசு அனுமதியின்ரி சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த இரு கல்குவாரிகளும் மூடப்பட்டன. குவாரிகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், ‘மாவட்டத்தில் இதுபோல சோதனைகள் தொடரும்’ என்றாா்.