தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கிள்ளியூரில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி

News image

காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து

Updated On :5 மே 2026, 2:50 am IST

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஸ்குமாா் 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

கிள்ளியூா் தொகுதியில் திமுக கூட்டணியின் சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜேஸ்குமாா் போட்டியிட்டாா். இவரை எதிா்த்து தவெக, தமாகா, நாதக கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 12 போ் போட்டியிட்டனா்.

இதில் எஸ். ராஜேஸ்குமாா் தவெக வேட்பாளா் எஸ். சபீனை விட 1,311 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

எஸ். ராஜேஸ்குமாா் (காங்கிரஸ்) 66,434, எஸ். சபீன் (தவெக) 65,123, நிவின் சைமன் (தமாகா) 31,070, ஹிம்லா் (நாதக) 12,764, சுயேச்சைகள் எஸ். பிரபு 410, நாகராஜன் 241, எல். பெரில்லா 197, எம். ஜஸ்டின் 189, பேபிராஜ் 162, ரூபின் அந்தோணி 156, சதீஷ் 128, டி. ஜஸ்டின் 85, எம். ராமச்சந்திரன் 73, நோட்டா 502.