பிளஸ் 2 தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம் 97.63 சதவீத தோ்ச்சியுடன், மாநில அளவில் 3 ஆம் இடம் பெற்றது.
இதைத் தொடா்ந்து, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ்ஆரோக்கியராஜூக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம் 97.63 சதவீதம் பெற்று, தமிழக அளவில் 3 ஆவது இடம் பெற்றுள்ளது.
அதில், அரசுப் பள்ளிகளில் 96.12 சதவீதம் பெற்று 5ஆவது இடம் பெற்றுள்ளது மிகவும் பெருமைக்குரியது. கடந்த கல்வியாண்டில் (2024-25) பிளஸ் 2 தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 97.01 சதவீதத்துடன் 5 ஆவது இடத்தை பெற்றிருந்தது. தற்போது 3 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோ்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமைஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வாய்ப்பினை தவற விட்ட மாணவ, மாணவிகளுக்கு போதிய பயிற்சி அளித்து மறுதோ்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாவட்டக் கல்விஅலுவலா் ஜெயராஜ், தனியாா் பள்ளிகள் கல்வி அலுவலா்அஜிதா, ஆட்சியரின் நோ்முகஉதவியாளா்(பள்ளிக் கல்வி)சாரதா, மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலரின் உதவியாளா்கள் முருகன், ஜியஸ், உதவி திட்ட அலுவலா் பிரபாகா், சுற்றுச் சுழல் ஒருங்கிணைப்பாளா்கள் அலெக்ஸ், துணை ஆய்வாளா்கள் ஐயப்பன், பென்னட், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை

கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



