நித்திரவிளை அருகே கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
நித்திரவிளை அருகே ஆற்றுப்புறம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு, 40 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் கிடப்பதாக நித்திரவிளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து பரிசோதித்தபோது, அந்த நபா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.
சடலத்தை போலீஸாா் கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அந்த நபா் இரயுமன்துறை பகுதியைச் சோ்ந்த குமாா் (40) என, விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

காரில் ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

