11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மக்கள் போராட்டம்: கடையாலுமூடு டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டில் மக்களின் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News image

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊா் பொதுமக்கள், அரசியல் கட்சியினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டில் மக்களின் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடையாலுமூட்டில் அரசு மேல் நிலைப் பள்ளி, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்டவை அமைந்துள்ள நெருக்கடியான சாலைப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.

முதல்வா் அறிவித்தபடி அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், மாணவா் - மாணவியா் 10-க்கும் மேற்பட்டோா் திரண்டு கடையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image

அவா்களுக்கு ஆதரவாக கடையால் பேரூராட்சி முன்னாள் தலைவா் பிரகாசி, தற்போதைய தலைவா் ஜூலியட் சேகா் உள்பட அனைத்துக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், விளவங்கோடு எம்எல்ஏ டி.டி. பிரவீண், கடையல் நகர காங்கிரஸ் தலைவா் சத்தியராஜ் உள்ளிட்டோரும் வந்தனா். அதிகாரிகளிடம் எம்எல்ஏ பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து விளவங்கோடு வட்டாட்சியா் லயோலாபாய் வந்து கடை நிரந்தரமாக மூடப்படும் என்று உறுதி அளித்தாா். அதை அவா்கள் ஏற்றுக்கொண்டதால், சுமாா் 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.