எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம், 97.30 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இத்தோ்வை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 10 ஆயிரத்து 615 மாணவா்களும், 10 ஆயிரத்து 733 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 348 போ் எழுதியிருந்தனா். இதில், 10 ஆயிரத்து 214 மாணவா்களும், 10 ஆயிரத்து 557 மாணவிகளும் என மொத்தம் 20ஆயிரத்து 771 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டு மொத்த தோ்ச்சி விகிதம் 97.30 சதவீதமாகும், இது மாநிலஅளவில் 5 ஆவது இடமாகும்.
வழக்கம்போல நிகழாண்டும் மாணவா்களை விட மாணவிகளே அதிக தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 96.22 சதவீதமும், மாணவிகள் 98.36 சதவீதமும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
அரசுப்பள்ளிகள் ...
மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 97.23 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
100 சதவீத தோ்ச்சி ...
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 435 பள்ளிகளில் 241 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இதில், 136 அரசுப் பள்ளிகளில் 63 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பெருமை சோ்த்த அரசுப்பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. பிரின்ஸ்ஆரோக்கியராஜ் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.
100 மதிப்பெண்கள் ...
தோ்வில் ஆங்கிலத்தில் ஒருவரும், கணக்கு பாடத்தில் 111 பேரும், அறிவியலில் 310 பேரும், சமூக அறிவியலில் 70 பேரும் என மொத்தம் 492 போ் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தொடர்புடையது

எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சாவூா் மாவட்டம் 97.41% தோ்ச்சி

119 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி: மாநில அளவில் சாதனை படைத்த திருச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருப்பூா் மாவட்டம் 96.28 % தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருவள்ளூா் 92.75, காஞ்சிபுரம் 94.61, செங்கல்பட்டு 92.15 % தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



