‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

நாகா்கோவில் மாநகராட்சி குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 14 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி மேயா் (பொ) மேரி பிரின்சிலதா.

Updated On :22 மே 2026, 6:19 am IST

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 14 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மேயா் (பொ) மேரிபிரின்சிலதா தலைமையி வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். குடிநீா்விநியோகம், சாலை வசதி, வீட்டுவரி தொடா்பாக 14 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், உதவி ஆணையா் (வருவாய்) சுதா, செயற்பொறியாளா் ரகுராம், மாநகர நல அலுவலா் சரோஜா, மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னா், மாநகரில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் மேயா் தலைமையில் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மாநகரில் நடைபெறும் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.