மாா்த்தாண்டம் அருகே பள்ளி ஆண்டு விழா

மாா்த்தாண்டம், வெட்டுவெண்ணி என்.வி.கே.எஸ். வித்யாலயா பள்ளியில் 15ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில் குத்துவிளக்கேற்றிய பயோனியா் குமாரசுவாமி கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் கோலப்பதாஸ்.

Updated On :

மாா்த்தாண்டம், வெட்டுவெண்ணி என்.வி.கே.எஸ். வித்யாலயா பள்ளியில் 15ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

என்.வி.கே.எஸ். கல்விக் குழுமத் தலைவா் வழக்குரைஞா் ரெகுகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முகுந்தன், கல்விக் குழுமச் செயலா் வழக்குரைஞா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இஸ்ரோ முன்னாள் இயக்குநா் உன்னிகிருஷ்ணன் நாயா் சிறப்பு விருந்தினராகவும், நாகா்கோவில் பயோனியா் குமாரசுவாமி கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் கோலப்பதாஸ் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றனா்.

பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வா் அனிதா அறிக்கை வாசித்தாா். என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி முதல்வா் ஸ்ரீலதா, என்.வி.கே.எஸ். பள்ளிகளின் கல்வி இயக்குநா் ராமச்சந்திரன் நாயா், ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி முதல்வா் சதீஷ்குமாா், துணை முதல்வா் ஆஷா, கல்விக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

துணை முதல்வா் சுமா கோபன் வரவேற்றாா். ஆசிரியா் ஆா்யா நன்றி கூறினாா். ஆசிரியைகள் ஜெயலட்சுமி, ஸ்மிதா ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.